Thursday, May 14, 2009

ஒரு பூவை பொட்டு வைத்த பொழுது....

பிறை விட்டமானதை
குறைபட்டுப் போனதை
நிறை வட்டமாக்கினாள் மாது!-_ அவள்
நெற்றியில் பொட்டிடும் போது!

நெற்றியில் ஒரு விரல்
ஒற்றிய பிறகவள்
சுற்றியதென்னடி மாயம்?_அதில்
சூரியன் தந்ததா சாயம்?

வண்ணத்துப் பொட்டாள்
வானவில் தொட்டாள்
எண்ணினேன் தினமொரு வண்ணம்_நான்
ஏழ் நிறம் காண்கிறேன் இன்னும்!